புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் வடக்கில் ‌ இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தொடர்பாக விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வடக்கில் அரச காணிகளை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனவும் கவனயீர்ப்பு ‌போராட்டம் நேற்று (10-03-2023) வெள்ளிக்கிழமை ரத்மல்யாய பிரதேசத்தில் இடம் பெற்றது.

எக்ஸத் ஊடக வலையமைப்பும் பலவந்ததாக வெளியேற்றப்பட்ட ‌அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் “வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின்‌ இன உறவை சீர்குலைக்காதே, வடக்கு முஸ்லிம்களின் அகதிவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றவில்லை, அரச காணிகளை பகிர்ந்தளிக்கப்படவில்லை” என கோசங்களை எழுப்பினர்.

WAK