புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு

இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழம் மற்றும் ஏனைய உயர் துறைகளுக்கு 2017 இல்19 மாணவர்களும், 2018 இல் 19 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு …

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் க.பொ.த. உயர் தர பிரிவில் சித்தியடைந்து உயர் கல்வி துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்ற பிரதான நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.சி. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் நிஹாரா றியால்தீன், உதவி அதிபர்களான எம்.எச்.எம். நபீல், எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றார்கள் பலரும் கலந்து கொண்டனர். க.பொ.த. உயர் தர பிரிவுக்கான பகுதி தலைவர் எம்.எப்.எம். ஹுமாயூன் இந்நிகழ்வுதனை நெறிப்படுத்தி இருந்தார்.
இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழம் மற்றும் ஏனைய உயர் துறைகளுக்கு 2017 இல்19 மாணவர்களும், 2018 இல் 19 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு கல்வியியல் கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளுக்கும் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமையானது ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.
வர்த்தக துறை, கலை துறை, பொறியியல்முறை தொழில் நுட்பம் மற்றும் உயிர் முறை தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் 03 ஏ சித்தி பெற்றவர்கள், மாவட்ட மட்டத்தில் 01ம், 02ம், 03 ம் இடங்களை பெற்ற  மாணவர்கள், அவர்களின் பெற்றார்கள் சகிதம் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
ஸாஹிராவின் கல்வி சாகரம் பிரிவு 02 சஞ்சிகையும் இந்நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது.