புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் தோற்றம் – 5

(இஸட். ஏ. ஸன்ஹிர்)

நோர்த் வீதியில் இருந்து தற்போதைய இடத்துக்கு

கொழும்பு ஸாஹிறாவின்  கிளைகளாகத்  தொடங்கப்பட்ட பாடசாலைகளுக்குப் பொறுப்பாக அங்கு கற்பித்த சிறந்த ஆசிரியர்கள் உதவி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். புத்தளம் ஸாஹிறாவில் உதவி தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றிய A.M. கல்தேரா, M.K.A. லத்தீப் போன்றோர்கள் அவ்வாறானவர்களே. அவ்வாறே ஒறாபி பாஷாவினால் அறபு மொழியில் இயற்றப்பட்ட கொழும்பு ஸாஹிறாவின் பாடசாலை கீதமும் புத்தளம் ஸாஹிராவிலும் ஆரம்பத்தில் பாடப்பட்டது. வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் அங்கிருந்த இல்லங்களில் பெயர்களே இங்கும் பயன்படுத்தப்பட்டன.

Zahira College Tutorial Staff – in 1948 Taken at first Zahira College Building (Opposite ESM’s House)

Sitting : Mrs. Misso, Miss. D. Jonk, Mr. Sellaiyah, Mr. M.K.A. Lathiff (Principal), Mr. Mohideen, Mrs. Theresa Isacks, Miss. Sampanthan

Standing : Mr. Vinasiththampi, K.V.L. Abdul Hameedu Lebbai, Mr. Kalathil (Keralite), (Unknown), Mr. Misso, (Unsure – might be Seyad Ahamed Sir (Seeni Muththu)

(Thanks: S.M. Mubarak Sir)

கொழும்பு ஸாஹிறாவின் தொடங்கப்பட்ட இடங்களிலெல்லாம் கிளை நிறுவனகளுக்குப் பொறுப்பாக, உதவி தலைமை ஆசிரியர்களாக கொழும்பு ஸாஹிறாவின் சிறந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். புத்தளம் ஸாஹிறாவில் பணியாற்றிய A.M. கல்தேரா, M.K.A. லத்தீப் போன்றோர்கள் அவ்வாறானவர்களே. அவ்வாறே ஒறாபி பாஷாவினால் அறபு மொழியில் இயற்றப்பட்ட பாடசாலை கீதமும் புத்தளம் ஸாஹிராவிலும் ஆரம்பத்தில் பாடப்பட்டது. வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் அங்கிருந்த இல்லங்களில் பெயர்களே இங்கும் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பம் முதலே எமது ஸாஹிறா கல்லூரி பல்வேறு உள்ளக வெளியக விளையாட்டுக்கள் உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் P.V. ஜேம்ஸ் (1951 – 1953) அவர்களுக்கான பிரியாவிடையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். படத்தில் கல்லூரி முகாமையாளர் முன்னாள் சபாநாயகர் H.S. இஸ்மாயில் உட்பட, நிருவாகக் குழுவினர், ஆசிரியர்கள் மாணவர்கள் காணப்படுகின்றனர்.

Angora House, House meet – 1948

Seated L-R  1.Mr. H.M. Jehufer, Miss De Jone, 3. Mr. kalathil, Mr. Vinasithambi

Sir John Kothalavala’s visit to Zahira College, Puttalam

சாரணர் அணிவகுப்பு மரியாதை

சேர் ஜோன் கொத்தலாவல அவர்களுடன் உடன் வருபவர் சாரண ஆசிரியர் Mr. D.W.S. De Wickramathilakaஆவார். இவர் பின்னர் கல்லூரி அதிபராகக் (11.07.1953 – 30.06.1956) கடமையாற்றினார்.

எச்.எஸ். இஸ்மாயில் கட்டிடம், கறுப்புத்தரவையில் அமைந்திருந்த பொது மலசலகூடம் என்பன பின்னணியில் …

ஸாஹிரா கல்லூரியில் இடம் பெற்ற சுதந்திரதின வைபவத்தில் கலந்து கொண்ட புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவிகள் – 1955

 ஸாஹிரா கல்லூரியில் இடம் பெற்ற நாடக நிகழ்வொன்றில் பங்கேற்றோர்

கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர் தொகை அதிகரித்தது. நோர்த் வீதியில் மற்றுமொரு கட்டிடமும் அமைக்கப்பட்டது. எனினும் அதுவும் போதுமானதாக இருக்கவில்லை. ஸாஹிறாவுக்கென நிரந்தரமான ஒரு இடம் தேவைப்பட்டதுடன் உதவி நன்கொடை பெரும் தனியார் பாடசாலையாக இது இருந்தமையால், கட்டிடங்களையும் தாமே அமைக்கவேண்டியுமிருந்தது. இந்நிலையில் M.C. முஹம்மது நெய்னா மரைக்கார் தம்பதியினர் தந்தையின் நினைவாக தற்போது கல்லூரி அமைந்திருக்கும் காணியை அன்பளிப்பு செய்தனர். M.H.M. நெய்னா மரைக்கார் அவர்களினால் முதலாவது கட்டிடம் இங்கு அமைத்துக்கொடுக்கப்பட்டு அது 19.8.1950 அன்று திறந்துவைக்கப்பட்டது.M.C.M. Maraikar

 

நோர்த் வீதியிலும் தற்போதைய இடத்திலும் வகுப்புக்கள் நடைபெற்றமையால் நடைமுறை சிக்கல்கள் உருவாகின. புதிதாகப் பெறப்பட்ட காணியில் நிரந்தரமாகக் கல்லூரியை அமைத்துக்கொள்ள முகாமைத்துவக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக அன்றைய அதன் முகாமையாளர் H.S. இஸ்மாயில் அவர்கள் இதற்காக அதிக பிரயத்தனம் எடுத்தார்.

கூட்டுறவு இயக்கம் பற்றி அதிக அக்கறை கொண்ட  ஒரு தலைவர் H.S. இஸ்மாயில் ஆவார்.  அக்காலப் பகுதியில் புத்தளம் டிஸ்திரிக் தெங்குப் பொருள் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் அவர் செயற்பட்டார்.  H.S. இஸ்மாயில் அவர்களின் முயற்சியினால் சங்கத்தைப்  பயன்படுத்தி பணம் சேகரிக்கப்பட்டு இங்கு ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டு அது ‘கூட்டுறவுக் கட்டிடம்’ என்று பெயரிடப்பட்டது. 1953 செப்டம்பர் முதல் அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் கற்பதற்கான வசதி அதன்மூலம் செய்து கொடுக்கப்பட்டது.

Co-operative block

இன்னும்  வரும் . . .