புத்தளம் ஸாஹிறாவின் 76 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கத்தாரில் உதைபந்தாட்டப் போட்டி

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின்பழையமாணவர்கள் அங்கத்துவம் வகிக்கும் ஸஹிரியன் FC அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீன், International Walking Football Federation (IWFF) அமைப்பின் ஆசியாவுக்கும் கத்தாருக்குமான தலைவர் பர்ஹான் அல் ஷேக் அல் செய்யத் ஆகியோர் …

புத்தளம் ஸாஹிறா கல்லூரியின் 76 வது வருட பூர்த்தியை முன்னிட்டு இம்முறை தொடர்ச்சியான பல நிகழ்வுகள் கல்லூரியினாலும் பழைய மாணவர் அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கு வெளியே , கத்தாரில் இயங்கும் புத்தளம் ஸஹிரியன் FC அமைப்பினால் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்பட்டது. பதினான்கு விளையாட்டுக்கழகங்கள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டி கத்தார் அல்ஸாத் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இடம்பெற்றது.

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின்பழையமாணவர்கள் அங்கத்துவம் வகிக்கும் ஸஹிரியன் FC அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் மபாஸ் மொஹிதீன், International Walking Football Federation (IWFF) அமைப்பின் ஆசியாவுக்கும் கத்தாருக்குமான தலைவர் பர்ஹான் அல் ஷேக் அல் செய்யத் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்றோருக்கான விருதுகளையும் கிண்ணங்களையும் வழங்கிவைத்தனர். ‘கத்தார் இலங்கை வெற்றிக்கிண்ணத்துக்கான’ (QCC) இப்போட்டியில் வெற்றியீட்டியோருக்கு, கத்தாரின் ஆளும் அரச குடும்பத்தவருள் ஒருவரான ஷேக் நவாப் பின் நாசர் அல்தானி அவர்களினதும் அல்ஸாத் உதைப்பந்தாட்டக்கழக பயிற்றுவிப்பாளரும் பிரபல சர்வதேச விளையாட்டுக்கு கழகமான பார்சிலோனாவில் விளையாடிய வீரருமான சாவி ஹெர்னாண்டஸ் அவர்களினதும்   கையெழுத்திட்ட உதைபந்து ஒன்றும் வழங்கப்பட்டது.

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின்பழையமாணவரும் QCC யின் தலைவருமான புத்தளம் மண்ணின் மைந்தன் இஷாம் மரைக்கார் அவர்களின் வழிகாட்டலில் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு அங்கத்தவர்கள்அனைவரினதும் பூரண ஒத்துழைப்புடன்  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்ட இப்போட்டிகள் அனைத்தும் யூடியூப் சமூக வலைத்தளமூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

/Zan