புத்துணர்ச்சியுடன் ஆரம்பமானது ‘YSF’ அமைப்பின் வருடாந்த ஒன்றுக்கூடல்

“Youth Scholarship Foundation-YSF ” அமைப்பின் வருடாந்த ஒன்றுக்கூடல் கத்தாரின் பருவகால மழையுடனும், இதமான குளிர்காற்றுடனும் நேற்று முன்தினம் (06-01-2023) Qatar Skill Development Center கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

புத்தளத்தில் உயர்தரம் மற்றும் பல்கலைக்கழங்களில் பயிலுகின்ற வசதியற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க உழைக்கும் இவ்வமைப்பின் வருடாந்த ஒன்றுக்கூடலுக்கு புத்தளத்தில் கல்வியில் அக்கறையும், கரிசனையும் கொண்ட அன்பர்கள் சுமார் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆஷிக் மெளலவியின் கிராஅத்துடன் ஆரம்பமான இவ் 11வது ஒன்றுகூடலில் அமைப்பின் செயற்பாடுகள்,அது கடந்து வந்த பாதை, எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விடயங்களை சகோ. மஜாஸ் தந்து தலைவர் உரை மூலம் வந்திருந்தவர்களுக்கு தெளிப்படுத்தினார்.

FSMA அமைப்பின் கடந்தகால தலைவர் விஷேட விருந்தினராக அழைக்கபட்டு அமைப்பு சார் நடவடிக்கைகள், தொடர்தேர்ச்சியான பங்களிப்பு உள்ளிட்ட விடயங்களை வந்திருந்தவர்கள் பார்வைக்கு விட்டு சென்றார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமான கடந்த நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிய நிர்வாக குழு தெரிவானது. இதனை சகோ. ஜஹாங்கீர் நெறிப்படுத்தினார். நிகழ்வின் வரவேற்புரை தொட்டு இறுதிவரை சகோ. ரஸ்லான் தொகுத்து வழங்க, சகோ. தஸ்தீக்கின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.

கொரோனா உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலையினால் கடந்த 3 வருடங்களாக நடைபெறாது தள்ளிவைக்கப்பட்டிருந்த இவ்வருடாந்த ஒன்றுகூடலின் பிற்பாடு புதிய தலைவராக சகோ. ஜெசார், செயலாளராக சகோ. வசீம் அக்ரம், பொருளாளராக சகோ. நிஹாத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK