பூலாச்சேனை கிராமத்தின் முதல் விஷேட வைத்திய நிபுணர் நஸீப் தாஸிம்
(Noon Afsar)
.
பூலாச்சேனை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட வைத்தியர் தாஸிம் முஹம்மத் நஸீப் பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று, 1998ம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் தோற்றி 141 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து மாவட்ட மட்டத்தில் எட்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், பூலாச்சேனை கிராமத்துக்கும் பெருமை தேடித் தந்தார்

2005 ம் ஆண்டு கா.பொ உயர் தரத்தில் (A/L) உயிரியல் விஞ்ஞான கற்கைநெறியை தேர்ந்தெடுத்து 3 A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். 2006ம் ஆண்டு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைந்து கொண்ட வைத்தியர் நஸீப் 2012ம் ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற வைத்தியராக பட்டம் பெற்று பூலாச்சேனை கிராமத்தின் முதல் வைத்தியராக வரலாற்றில் தடம்பதித்தார்.
.
குருநாகல் வைத்தியசாலை, புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியராக பணியாற்றியவர் மேலும் வைத்தியத் துறையில் தனது உயர் கற்கையை நெறியை தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது. (Post graduate MD training NHSL 2017 to 2019 MD, NEPHROLOGY SPECIALTY TRAINING SRI JAYAWARDENEPURA 2019 TO 2022, Foreign training 2022 to 2023 St George’s hospital Tooting, London) என அவர் மருத்துவத் துறையில் விஷேட நிபுணத்துவத்தை பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.
.
எமது நாட்டின் சிறந்த விஷேட சிறுநீரக வைத்திய நிபுணர்களில் வைத்தியர் நஸீப் ஒருவராவார். மேலும் வைத்திய துறையில் பல சாதனைகளையும், மக்களுக்கான சேவைகளையும் செய்துகாட்டிட அல்லாஹ் அருள்புரிவானாக. எமது மண்ணின் சொத்து வைத்தியர் தாஸிம் முஹம்மத் நஸீப் அவர்களுக்கு பூலாச்சேனை கிராமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
.
WAK