பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கு….
பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முக்கியமான செய்தி.
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலையினுடைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை ஆரம்பம் செய்தல் என்பன தொடர்ந்தும் தாமதமாகும் சாத்தியப்பாடுகள் இருப்பதனால் நாம் மாற்று வழிகளைக் கடைப்பிடித்து வீட்டிலிருந்தபடியே எமது பிள்ளைகளை தொடர்ந்தும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டியுள்ளது.
இதற்கு தற்காலிக தீர்வாக எமது பாடசாலை ஆசிரியர்களின் முயற்சியினால் தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையான சகல வகுப்புக்களுக்கும் வகுப்பு மட்டத்திலான வட்ஸ்ஆப் WhatsApp குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். இந்த வட்ஸ்ஆப் குழுக்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதோடு தினமும் காலை முதல் மாலை வரை மாணவர்களுக்கான ஓன்லைன் ONLINE பாடங்கள், பயிற்சிகள், பரீட்சைகள் என்பன நடைபெறுகின்றன.

இக்குழுக்களில் தாங்களும் தங்கள் பிள்ளைகளை இணைத்து பயன்பெற விரும்பினால் அல்லது இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் தங்களது பிள்ளையின் வகுப்பாசிரியருடனோ அல்லது அதிபரிடமோ தொடர்புகொள்ள முடியும்.
தகவல் அதிபர்
076-071 9590