பெருநாள் பந்தயங்கள்
வாய் வழித்தகவல்களின் அடிப்படையில் புத்தளத்தில் பெருநாள் பந்தயங்கள் இருநூறு வருடங்களுக்கும் மேலாக நடைபெறுகின்ற. குறித்த நேரத்துக்குள் பெரிய அளவிலான திட்டமிடல்கள் ஏதுமின்றி சங்கிலித்தொடர் போன்று பல நிகழ்ச்சிகள் ஓரிரு மணித்தியாலங்களுள் நடைபெறுவதும் போலீஸாரின் ஒத்துழைப்பு பெறப்படாமலிருப்பதும் இதன் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். ‘பெருநாள் ரேஸ்’, என்றும் ‘ரேஸ் தரவை’ என்றும் ஊரவர்களால் இது அழைக்கப்படும். யானை ஓட்டங்களும் முன்பு இதில் இடம்பெற்றுள்ளன.
பெருநாள் முதல் தினம் (முதலாம் பெருநாள்) நெடுங்குளத்துக்குக்குப் பக்கத்தில் இருந்த பெரிய தரவையிலும் இரண்டாம் பெருநாள் அன்று கண்காணிக்குளத் தரவையிலும் பந்தயங்கள் இடம்பெறும். பெரிய தரவைப் பந்தயங்கள் முதலாளி குடும்பத்தின் (இ.செ.மு. E.S.M.) ஆதரவிலும் சின்னத் தரவைப் பந்தயங்கள் மீரா சாஹிப் மரைக்கார் (மீசி மரைக்கார், ஜலால்தீன் மரைக்காரின் தந்தை) பரம்பரையாலும் நடத்தப்பட்டன. 30.05.1987 அன்று பெருநாள் பந்தயங்களின் போது வெளித் தலையீடுகளால் அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது. அப்போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் இவை./ Zan