பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் கல்பிட்டி நினைவுகள்-07
கடலேரியோடு ஊர்மக்களுக்குப் பெரிய வாழ்விருந்தது. கானகம் போல் வெயில் கொளுத்தினாலும் சாமரம் வீசும் கடல் காற்று. மக்கள் சுவாசிக்க சுகாதாரத்தைச் சுமந்து வரும் மருத்துவக் குணமுள்ள காற்று. அது மாசடைந்தால்
வாழ்நாள் வீழ்ச்சி அடையும்.
.
கடலேரியில் மொண்டுவரும் உவர் நீரும் உன் கரையை அலங்கரிக்கும் இலந்தைமர இலைகளுமின்றி மையத்து விழுந்தால் குளிப்பாட்டும் காரியம் முடிவதில்லை எங்களூரில். மீன் கேட்டு அழும் குழந்தைகளுக்கும் பணம் தேட விரும்பும் இளைஞருக்கும் வாழ்வளிக்கும் நிதியமும் நீதான் என்று புகழ மனம் நாடுகிறது.
.
* * *
புத்தளம் நகரைக் கடந்து சென்றால்
புத்தளம் நகரைக் கடந்து சென்றால்
மன்னார்ப் பாதையில்
கரைத்தீவு, இலவங்குளம் , சேராக்குழி,
அறுவாக்காடு .
நீண்ட காட்டுப் பகுதிகளோடு கலந்திருக்கும்
கிராமங்கள் .
அந்தக் கிராமங்களையும் சுற்றிவளைத்துக்கிடக்கிறது.
கல்பிட்டிக் கடலேரி.
அந்த மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி
நிற்கும் தூண்களில் கடலேரியும் ஒன்று.
காளாவி ஆற்றின் கரையில் , வில்பத்து
விலங்கு சரணாலயத்தின் வாசலில்
இருக்கும் ஊர்கள் இவை.
***
.
இங்குதான் ஒரு பூகம்பம் காத்திருந்தது. முழுப் புத்தளத்தையும் அதிரச் செய்த சம்பவம் அது. கொழும்பில் நாளாந்தம் குவியும் திண்மக் கழிவுகளை, குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசாங்கம் கண்டு பிடித்த இடம் கடலேரியியைத் தொட்டபடி இருந்த வளமான சேராக் குழி மண்.
.
இலவன் குளத்தையும் கரைத்தீவையும் தொட்டபடி, மரங்களடர்ந்த காட்டுப்பகுதி. அலைகளால் அந்தப் பகுதியை அரவணைத்துக் கிடக்கிறது கடலேரி. மீன்பிடிக்காகக் காத்திருக்கின்றன மீன் பிடி படகுகள் வரிசையில். இதுதான் குப்பை கொட்ட அரசாங்கம் தெரிவு செய்த இடம்.
.
புத்தளம் சுற்றாடல் செயற்பாட்டாளர் முபாரக் ஆசிரியர் ஐந்தாவது தடவையாகத் தொலை பேசியில் புத்தளம் அறுவாக் காட்டு நிலை மோசமடைந்து வருவதாகவும் அதைப்பற்றிப் பேச புத்தளம் வரும்படியும் பேசினார். புத்தளம் சுற்றாடல் பிரச்சினைகளின்போது அந்த விடயங்களை என்னுடன் அவர்பேசுவது வழக்கம். இரண்டாவது நாள் புத்தளம் வந்துவிட்டேன். மாலையில் 7,8 இளைஞர்களோடு பெரியபள்ளிவாசல் அறை ஒன்றில்
முபாரக் அவர்களைச் சந்தித்தேன்.
.
WAK
