பொதுத் தேர்தல் – 2020 – தபால் மூல வாக்களிப்பு – ஜூலை 13, 14, 15, 16 ஆம் திகதிகளில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜூலை 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஸ்ரீரத்நாயக்க அறிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பின் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.