போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி

(எம்.யூ.எம்.சனூன்)

“போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி ஒன்று வியாழக்கிழமை (19-01-2023) காலை முன்னெடுக்கப்பட்டது. போதைக்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடை பவணியாக புத்தளம் மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி நகர மண்டபத்தைச் சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். போதைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த விழ்ப்புணர்வு பேரணியில் இவர்கள் கலந்து கொண்டனர்.

நகர மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான விஷேட கூட்டத்தில் புத்தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரவீந்திர விக்ரமசிங்க, புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை செனவிரத்ன ஆகியோரிடம் புத்தளம் மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் போதை ஒழிப்பு தொடர்பான மகஜரையும் கையளித்தனர்.

WAK