போதைக்கு எதிராக புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் மும்முரம்

புத்தளம் ஸாலிஹீன் பள்ளியில் போதைக்கு எதிரான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04-01-2023) இஷா தொழுகையை தொடர்ந்துஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுவில் விசேட அதிதிகளாக புத்தளம் உயர் பொலிஸ் அதிகாரிகள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம், ஆலோசகர் சகோதரர் ஜவ்சி, புத்தளம் பெரிய பள்ளி உப தலைவர் அல்ஹாஜ் பசால், சட்டத்தரணி அஸீம், நகர சபை உறுப்பினர்களான ரனீஸ், ரஸ்மி, ஸிபாக் ஆசிரியர், அஸ்கின், கிராம உத்தியோகத்தர் முஜாஹித், PULSED அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் நாசிக், மற்றும் புத்தளத்தில் போதை ஒழிக்க வேண்டும் என்று இயங்கக்கூடிய வாலிப அமைப்பு, ஸாலிஹீன் பள்ளி நிர்வாக அங்கத்தவர்கள், சமூக நலன் விரும்பிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
.
இவர்களுக்கு மத்தியில் ஸாலிஹீன் பள்ளி தலைவர் அஷ்ஷேக் எம்.பீ.எம்.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) போதைக்கு எதிரான பிரகடனம் வாசிக்க ஸாலிஹீன் மஹல்லாவாசிகளால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
.
பிரகடனம்
போதைப்பொருள் (ஐஸ்) பயன்படுத்தும் மற்றும் வியாபாரிகளின்
1. குடும்பங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
2. இவர்களின் குடும்பங்களில் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாயலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.
3. இவர்களுக்கு பள்ளியில் நடைபெறும் எந்த நல்ல விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட மாட்டாது.(அழைக்கப்படவும் மாட்டார்கள்)
4. இவர்களின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.
5. இவர்களின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. இவர்களின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.
.
எனவே மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற் கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்பட்டது.
.
WAK