மகாவலிகங்கையில் முதலையா?

மகாவலி கங்கையினூடாக கடலை அடையும் மிக நீண்டதூரப் பயணத்தின்போது, உயிரைப் பறிக்கும் முதலைகளினால், தான் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக, பிரிட்டனைச் சேர்ந்த கெவ் பிரெடி என்ற படகோட்டி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், கிளெவ்ஸ்டரைச் சேர்ந்த மேற்படி நபர், படகு மூலம், மகாவலி கங்கையினூடாகக் கடலை அடையும் பயணத்தில் வெற்றிகண்டார்.

தனது பயணத்தை ஆரம்பித்தார். அப்பயணத்தின் 200 மைல்களைக் கடக்கும்போது, முதலைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக, அவர் கூறியுள்ளார். இதன்போது,  உடலில் சிறிதளவு கீறல்கள் ஏற்பட்ட நிலையில், தனக்கு பயத்தைத் தோற்றுவிக்கும் வகையில், முதலைகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். “நான் படகில் நின்றபடியே பயணத்தை மேற்கொண்டேன். ஒரு சந்தர்ப்பத்தில், படகின்  2 அல்லது 3 அங்குலப் பகுதி மட்டுமே, நீரினுள் அமிழ்ந்திருந்தது. இதன்போது, 5 மீற்றர் தொலைவில், சுமார் இரண்டு அடி நீளமுள்ள முதலையொன்றின் தலை, எனக்குத் தெரிந்தது. மகாவலி கங்கையில் வாழும் முதலைகள், உவர்நீர் முதலைகள். இவை, சுமார் 6 அடி நீளத்துக்கு வளரக்கூடிய ஆட்கொல்லி முதலைகள். இவை மனிதர்களை காவுக்கொள்ளக்கூடியன” என்றார். “இலங்கைக் கடற்பரப்பின் 800 மைல் தூரத்தை, எனது படகின்மூலம் கடப்பதே, இவரது அடுத்த இலக்கு” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார். 

MMM