மணல்குன்று பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் விஷேட ஒன்றுகூடல்

ணல்குன்று பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் விஷேட ஒன்றுகூடல் அண்மையில் பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 30 வருட வரலாற்றில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 500 ற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
.
இந்நிகழ்வின் தலைமையுரையும் வரவேற்புரையும் பாடசாலை அதிபர் M.S. மூஸீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தின் அண்மைய வளர்ச்சி மற்றும் யாப்பு தொடர்பாக அமைப்பின் செயலாளர் ஆசிரியர் தஸ்ரிக் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.
.
ஒன்று கூடலின் கருப்பொருள் உரையான முப்பதாம் ஆண்டு நிறைவு விழா (முத்து விழா) தொடர்பாக அமைப்பின் உறுப்பினரான சகோதரர் M.I. ஷகீல் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்த பாடசாலையின் ஸ்தாபக அதிபர் M.H.M.M. அக்பர்தீன் மரைக்கார் மற்றும் முன்னாள் ஆசிரியர் M.H.M. அஸ்ஹர் ஆகியோர் பாடசாலை வரலாறு மற்றும் முன்னேற்றம் தொடர்பாக உரையாற்றினர்.
.
இந்நிகழ்வின் விசேட வளவாளராக கலந்து சிறப்பித்த School of Excellence ன் அதிபரும் சமூக ஆர்வலருமான H. அஜ்மல் அவர்கள் பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்களின் பங்களிப்பு எனும் தொனிப் பொருளில் சிறப்புரையாற்றினார்.
.
பாடசாலையின் பிரதி அதிபர் A.J.M. இனூஸ் அவர்கள் பழைய மாணவர் சங்க கட்டமைப்பு, அமைப்பின் பாடசாலைக்கான பங்களிப்புகள் மற்றும் நடைபெற இருக்கும் முத்து விழாவில் பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.
.
இந்நிகழ்வில் மாணவர்களின் கண்கவர் நடனங்களும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பழைய மாணவர்களான M.S. ராபித் மற்றும் ஆசிரியை சனூரியா ஆகியோர் இந்நிகழ்வை தொகுத்து வழங்கியதோடு உதவி அதிபர் M.D.M. இர்பான் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. வெற்றிகரமான இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் ஆசிரியர் குளாத்திற்கு பாடசாலை சமூகம் சார்பாக உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
.
WAK