மரணச்செய்தி கேட்டதும் இதயம் இருண்டதுபோல் ஒரு உணர்வு – SACP மரிக்கார்
ஒரு தலைவனாய், ஒரு கவிஞனாய், ஒரு நண்பனாய், எந்தச் சூழலிலும் எழுந்து நிற்கும் இயல்பு கொண்டவனாய்,
எந்த உயர்…
மரணச்செய்தி கேட்டதும்…
இதயம் இருண்டதுபோல் ஒரு உணர்வு… Chairman Baiz இன் முகம் நெஞ்சை முழுமையாக நிறைத்துக்கொள்கிறது…
பொய்யாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்… மெல்ல மெல்ல.. தோல்வியடைகிறது…
அரசியல் மற்றும் மனிதப் பலவீனங்களுக்கு அப்பால்,
புத்தளம் ஒரு தலை சிறந்த தலைமைத்துவ ஆளுமையை திடீரென இழந்துவிட்டது…
அறிவு, ஆற்றல், துணிவு, சாணக்கியம் மிக்க
ஒரு இன்றியமையா புதல்வனை இந்த மண் இழந்து நிற்கிறது…
.
ஒரு தலைவனாய்…
ஒரு கவிஞனாய்.. ஒரு நண்பனாய்… எந்தச் சூழலிலும் எழுந்து நிற்கும் இயல்பு கொண்டவனாய்…
எந்த உயர் சபையையும் பிரதிநிதித்துவம் செய்யும் புத்தளத்தின் பிரதிநிதியாய்.. பல பரிமாணங்களுக்கு பொருந்திப்போன…
.
ஒரு பன்முக ஆளுமையின் மறைவு…. நிச்சயம் இது ஒரு ஈடுசெய்ய முடியா இழப்பு…!!
ஒரு பன்முக ஆளுமையின் மறைவு…. நிச்சயம் இது ஒரு ஈடுசெய்ய முடியா இழப்பு…!!
எப்போதும் ஓயாத தொலைபேசி… இன்று ஓய்ந்துவிட்டது…!
எந்த ஒரு விடயத்தையும் விரைவாகவும், வினைத்திறனாகவும் ஏற்பாடு செய்வதில்…
நான் வியந்த ஒரு நிர்வாகி…! இப்போது இல்லை…!!
.
கடந்த கந்தசாமி ஆசிரியரின் மரணத்தின் போது,
கடந்த கந்தசாமி ஆசிரியரின் மரணத்தின் போது,
காலை 9.00 மணியிருக்கும்… அழைப்புவிடுத்து, “Chairman, கந்தசாமி sir இன் உடலுக்கான இறுதி மரியாதை… School இல் சாத்தியப்படவில்லை… corona நிலை வேறு… என்ன செய்வோம்..” என்றபோது…
உடனே… “உடலை Town Hall க்கு கொண்டு வாருங்கள் மிகுதியை நான் பார்க்கிறேன்…” என்றார்…
சரியாக 11.30 க்கு ஏற்பாட்டு உதவிகளுக்காக அங்கு சென்று பார்த்தபோது… ‘இரண்டரை மணித்தியாலங்களுக்குள் இது சாத்தியமா..?’ என சிந்திக்குமளவு… அந்த இடமே ஒரு ராஜமரியாதைக்குரிய தளமாக காட்சியளித்தது…!
அவரது வீட்டில் உணவருந்தியிருக்கிறேன்….
பலமுறை ஒன்றாக பயணம் செய்திருக்கிறேன்…
.
சமூக பங்களிப்புகளுக்கான meeting மேசைகளில் அமர்ந்திருக்கிறேன்…
சமூக பங்களிப்புகளுக்கான meeting மேசைகளில் அமர்ந்திருக்கிறேன்…
ஒரு சிலபோது நிலைப்பாடுகளுக்காக வாதித்திருக்கிறேன்…
ஒன்றாக மேடையில் கவியரங்கம் செய்திருக்கின்றேன்…
அந்த நினைவுகளின் வாசம்… அவருக்கான ஒரு நீண்ட துஆவை எனக்குள் எழுந்துவரச் செய்கிறது…!!
.
அல்லாஹ்வின்.. கத்ர்…!
அல்லாஹ்வின்.. கத்ர்…!
எந்தக்கோட்டையையும் தகர்க்கும் மரணத்தின் வலிமை…!!
இங்கு இன்னொரு தடவை எமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது… அதனை பொருந்திக்கொள்வோம்… !!
வல்ல அல்லாஹ்…
அவரது பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வானாக…
சமூகவிவகாரங்களில் அவரது மகத்தான பணிகளையும், பங்களிப்பையும், நேரத்தையும், நேர்த்தியையும்…
தூய்மைப்படுத்தி ஏற்றுக்கொள்வானாக..!
அவரது கபுருடைய வாழ்வை நிம்மதியானதாக ஆக்கிவைப்பானாக…!
.
புத்தளம் மரிக்கார்.
.
WAK
.
WAK
