மரண அறிவித்தல் – நிஸார் காலமானார்

புத்தளம் கொப்பறா பள்ளி மஹல்லாவைப் பிறப்பிடமாகவும் பூலாச்சேனையில் வசித்து வந்த (இறுதியாக புத்தளம் நகரில் கரத்தையில் கஞ்சி வியாபாரம் செய்து வந்த) நிஸார் அவர்கள்….

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

புத்தளம் கொப்பறா பள்ளி மஹல்லாவைப் பிறப்பிடமாகவும் பூலாச்சேனையில் வசித்து வந்த (இறுதியாக புத்தளம் நகரில் கரத்தையில் கஞ்சி வியாபாரம் செய்து வந்த) நிஸார் அவர்கள் புத்தளம் மணல்குன்று மகன் வீட்டில் வபாத்தானார்.

அன்னார்  காலம்சென்ற சுபைர், உம்மு நாச்சியா தம்பதிகளின் மகனும், உம்மு லத்தீபா அவர்களின் அன்புக் கணவரும்,  அப்துல் அஹது, அன்சார், பைஹகி, பாஜுதீன், அமானுல்லாஹ், அப்துல் ஸமீன் காலம் சென்றவர்களான !ஜுவாஹிர் ஹாஜியானி ஹனீனா உம்மா ஜுவைரியா உம்மா ஆகியோரின் சகோதரரும் சர்ஜுன், ஜஹான், சுஹா ஆகியோரின் தகப்பனாரும் நிஸாம்தீன், ஷிபானியா ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26/07/2020) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு புத்தளம் வெட்டுக்குளம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் – மகன் சர்ஜூன்