மழைத்துளி

-முஸ்னத் பஷீர்-

 

Puttalamonline Rainமுகில்களை தூண்டி பயிர்களின் தோழனாக

பாரினிலே

மண்ணில் மண் வாசணையாய்

மலர்களிலே,மரங்களிலே

சோகங்களை தாண்டி

சோவென சோலைகளிலே

காற்றோடு சாய்ந்து

சாலைகளிலே,தென்றலாய்

தெருக்களிலே

வான் தோழனாக

வயல்வெளிகளிலே

இயற்கையைத் தரும்

மலைநாட்டில்,மலைகளிலே

காலநிலை மாற்றங்களோடு

காலைப்பொழுதினிலே

கவலையை மறக்க கரங்களிலே

மாதங்களில் மாறாமல்

மாலைப்பொழுதினிலே

வீசும் காற்றுடன்

வீட்டு முற்றத்திலே

இயற்கை அனர்த்தம் தரும் படியாக

இவ்வுலகிலே

இதுவரை காணாத நிறங்களிலே

பாவம் வானுக்கு என்ன கவலையோ

இவ்வாறு வடிக்கிறது கண்ணீர் துளிகளை

வானும் மேகமும் சண்டை இட்டதால்

உன் கண்களில் ஏற்பட்ட

சோகத்துளிகளே இம் மழைத்துளிகள்