மஸ்ஜிதுக்களை மீண்டும் திறக்க அனுமதி – ஜமாத் தொழுகை, ஜூம்ஆ தொழுகைக்கு அனுமதி இல்லை.

ஜமாத் தொழுகை, ஜூம்ஆ தொழுகை என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் இன்று(12-06-2020) முதல் சகல மஸ்ஜிதுகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வக்பு சபை அறிவித்துள்ளது. மஸ்ஜிதுகளைத் திறப்பதற்கு முன்னர் கட்டாயமாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகரின்(Pர்ஐ) அனுமதியைப் பெறுவது கட்டாயமென வக்பு சபை தலைவர் தெரிவித்துள்ளார்.