மாண்புமிகு கே.ஏ. பாயிஸ்
நடுத்தர குடும்பமொன்றில் நம் பாயிஸ் அவதரித்தார், பால்ய வயதினிலே படுசுட்டியாய் வளர்ந்த அவர்…
அபூஹனிபா நவ்ஷாத்
நடுத்தர குடும்பமொன்றில் நம் பாயிஸ் அவதரித்தார்
பால்ய வயதினிலே படுசுட்டியாய் வளர்ந்த அவர்
மாணவப் பருவத்திலே மதிநுட்பம் நிறைந்து நின்றார்.
தொடர்ந்து படித்திருந்தால் ஒரு தொங்கல் கண்டிருப்பார்.
அல்லாஹ்வின் நாட்டப்படி தன் ஆரம்ப அரசியலை
டொக்டர் இலியாஸிடம் கற்றுக் கொண்டு அமரர் அஷ்ரபின்
அரவணைப்பில் சாணக்கியம் கற்றுத் தேறி ‘பெரும் குடும்பங்கள்’
கையிலிருந்த புத்தளத்தை பாட்டாளி மைந்தனாக நிர்வகித்தார்.
புத்தளத்தின் மாண்புமிகு சேர்மனாக கால்நடை அமைச்சராக
கடந்து வந்தார் வெற்றிப் பாதையில்.
எம் ஊரின் கல்விக்காக அவரை எதிர்த்தவரும் வியந்த வண்ணம்
– ஏன் –
நம் நாட்டை ஆளுகின்ற மாண்புமிகு ராஜபக்ஷ, அவர் தம் அமைச்சர் சூழ
வியந்த வண்ணம், விந்தைமிக்க தொண்டு செய்தார். இது கற்பனை
கதையுமல்ல. ‘மிகைப்படுத்தல்’ என் எழுத்துமல்ல. இன்னும் எண்ணற்ற
சேவைகள் ‘கிறீஸ் மேன்’ பிரச்சினையில் இறைவன் இவரைக் கொண்டு
ஊரைக் காத்தான். ஊர் பாதுகாப்பு விடயங்களில் புத்தளத்தின்
எல்லைகளில் சேட்டை விட்டவர்களை தொடை நடுங்கி ஓட வைத்தார்.
ஆம்…..
இவர் குலத்தினிலும் சிம்மம் உண்டு. இவர் குணத்தினிலும் சிங்கம் உண்டு.
ஆலோசனைகள் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு தான் கொண்ட கொள்கையிலே தடுமாற்றம் சிறிதுமற்ற, உறுதியான முடிவெடுத்து,
புதுமை அரசியில் செய்த, பலராலும் புரிந்து கொள்ள முடிந்திராத, புதிராளி அவர்.
தன் வாழ்நாளில் புரட்சி செய்தார். மறைந்த பின்பும் புரட்சி செய்தார்.
நாட்டின் கடுமையான கொரோனா கொன்ரோலிலும் தன் பாசமிக்க உறவு சூழ, அன்பு நண்பர்கள் சூழ, ஊர் மக்கள் வெள்ளம் கொரோனாவை மறந்து சூழ, உறுதுணையாக நின்ற காவல் படையினர் சூழ, தன் அரசியல் எதிரிகளும் வியந்து சூழ,
சுப்ஹானல்லாஹ் அடி சேர்ந்தார்
நம் இறைவன் இணைவைத்தல் தவிர்ந்த ஏனையவை பொருந்திக் கொள்வான்.
எனவே என் இனிய ஊர் மக்காள்….
அன்னாருக்காக இறைஞ்சிடுவீர்….
என் இனிய நண்பனுக்கு இதய சமர்ப்பணம்.