முஅத்தின்களுக்கான அதான் கூறும் போட்டி

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்களுக்கான அதான் கூறும் போட்டி …

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்களுக்கான அதான் கூறும் போட்டி மற்றும் பொது அறிவு, இஸ்லாமிய வினா விடை போட்டியான அறிவுக்களஞ்சிய போட்டிகள் என்பனவற்றினை நடாத்த உள்ளது.

இவ் இரு போட்டிகளும் இம்மாதம் 09 ம் திகதி சனிக்கிழமை மாலை புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள நூமான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதான் கூறும் போட்டியானது மர்ஹூம் எம்.என்.எம். ஹனிபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக் கான போட்டியாகும். புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்கள் அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகத்தின் சிபாரிசின் பேரில் போட்டிகளில் கலந்த கொள்ளலாம்.
01 ம், 02 ம், 03 ம் இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும்  வழங்கப்படவுள்ளதோடு முதலிடம் பெறும் போட்டியாளர் கடமையாற்றும் மஸ்ஜிதுக்கு மர்ஹூம் எம்.என்.எம். ஹனிபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் சென்றடைய உள்ளது.
அறிவுக்களஞ்சிய போட்டியில் புத்தளம் மாவட்டத்தில் வதியும் 15 வயதுக்கு மேற்பட்ட யாவரும் கலந்து கொள்ள முடியும். 05 அங்கத்தவர்களை கொண்ட குழுவினராக போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
போட்டிகளில் வெற்றிபெறும் 01 ம் 02 ம் குழுவினர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்விரு போட்டிகளுக்குமான விண்ணப்பங்களை இல : 31, ஒழுங்கை இல : 09, போல்ஸ் வீதி, புத்தளம் எனும்   முகவரியில் அமைந்துள்ள ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அதன் தலைவர் அஷ்ஷெய்க் எச்.அப்துல் நாஸர் (ரஹ்மானி) தெரிவித்துள்ளார்.