ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது மும்பை அணி

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் இடம்பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் …

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி  ஹைதராபாத்தில் இடம்பெற்றது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் சென்னை அணியை நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி  நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை கைப்பற்றியது. இப் போட்டியில் மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 149 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை ஓர் ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

 

வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 5 ஓட்டம் என்ற நிலையிருக்க சென்னை அணியின் வெற்றிக்கு சிறப்பாக விளையாடிய  வோட்சன் 59 பந்துகளில் 80 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை அணிக்கு 2 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையிருந்தது. தாகூர் களமிறங்கி 19.5 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதிப் பந்தில் மலிங் எல்.பி.டபிள்யூ முறையில் தகூரை ஆட்டமிழக்கச்செய்து  மும்பை அணியை வெற்றி பெறச்செய்தார். இந்த வெற்றிமூலம் மும்பை அணி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுக்களையும், குருநல் பாண்டியா, மலிங்க மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.