முள்ளிபுரத்தில் வருடாந்த கண்காட்சி நிகழ்வும் சிறுவர் சந்தையும்

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் முள்ளிபுரம் தாருல் சலீம் அரபு மத்ரசா மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு மற்றும் சிறுவர் சந்தை என்பன அண்மையில் மத்ரஸா வளாகத்தில் மிக விமரிசையாக இடம்பெற்றன.

இந்த கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கண்காட்சி பொருட்களை தரப்படுத்தல் தெரிவுக்காக வேண்டி அங்கு வருகை தந்த பொது மக்கள் மற்றும் பெற்றார்கள் காட்சிப்பொருட்களுக்கு வாக்குகளை அளித்தனர்.

இதன் மூலமாக 303 வாக்குகளை பெற்று முகம்மது அதீக் முதலாம் இடத்தையும், 117 வாக்குகளை பெற்று பாத்திமா ஹயா மற்றும் பாத்திமா ஹம்னா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், 112 வாக்குகளை பெற்று பாத்திமா சாரா மற்றும் முஹம்மது சாதிக் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை மத்ரஸா மாணவர்களுடைய சிறுவர் சந்தையும் சமகாலத்தில் இடம்பெற்றன. மத்ரஸா அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஹஸ்பானின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளை மத்ரஸா முஅல்லிமாக்களான பின்த் பாரூக், பின்த் நிஸாம்தீன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

WAK