முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள்
பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனங்களின் அனுசரணையுடன் இலங்கையின் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஏ.எம். …
ரூஸி சனூன் புத்தளம்
புனித நோன்பை அனுஷ்டிக்கும் ஏழ்மை நிலையில் வாழும் பொது மக்களுக்கு முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனங்களின் அனுசரணையுடன் இலங்கையின் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லார் தலைமையில் புதன்கிழமை (30) இந்த உலர் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மன்னார் முசலி, அனுராதபுர மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வதியும் விதவைகள், வருமானம் குறைந்தவர்கள், அங்கவீனர்களை உள்ளடக்கிய குடும்பத்தினர், கூடுதலான அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்தினர், வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள் இணங்காணப்பட்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.