“ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்”
கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில்…
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!
-ஊடகப்பிரிவு-
கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆகக்கூடிய விலையாக 87 ரூபாவுக்கு மேல் கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எந்தவித எழுத்துமூலமான அறிவித்தலுமின்றி, கோதுமை மாவின் விலையை 05 ரூபாவினால் அதிகரித்த நிறுவனத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.