லேகர்ஸ் கழகத்தின் இப்தார் நிகழ்வு

லேகர்ஸ் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு லேகர்ஸ் பயிற்சி மைதானத்தில் லேகர்ஸ் கழக தலைவர் ஏ.ஓ.எம்.றிபாய் அவர்களின் தலைமையில் 25.05.2019 அன்று …

புத்தளம் லேகர்ஸ் கிரிகட் கழகத்தின் (Puttalam Lakers Cricket Club) வருடாந்த இப்தார் நிகழ்வும் NFGG யின் பணஅன்பளிப்பும் லேகர்ஸ் பயிற்சி மைதானத்தில் லேகர்ஸ் கழக தலைவர் ஏ.ஓ.எம்.றிபாய் அவர்களின் தலைமையில் 25.05.2019 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக விஷேட வைத்திய நிபுணர் ரிபாத் அவர்கள் கலந்துகொண்டதோடு விசேஷ அதிதிகளாக NFGGயின் முக்கிய உறுப்பினர்கள்  கலந்து சிறப்பித்தனர்.

கணிஸ்ட உறுப்பினர் முராத் அவர்களின் கிராஅத்தை தொடர்ந்து லேகர்ஸ்  கழகம் உருவாகிய நிலையையும் நோக்கங்களையும்அதன் வளர்ச்சியையும் தலைவர் விளக்கினார்,அதனை தொடர்ந்து பிரதம அதிதி டாக்டர் ரிபாத் உரையாற்றும்போது, இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தவேண்டியதின்அவசியத்தை வலியுறுத்தியதோடு அவர்களுக்கு அதற்கான ஊக்கத்தை கொடுக்க சகல தரப்பினரும் முன்வரவேண்டும் என்பதை குறிப்பிட்டார், இதற்காக NFGG அரசியல் மட்டத்தில் குரல் கொடுக்கும் என்றும், கடின பந்து விளையாடுவதற்கான ஒரு மைதானம் புத்தளத்தில் இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் இது சம்பந்தமாக  NFGGயின் நகர சபை உறுப்பினர் நகரசபையின் கவணத்திற்கு கொண்டு வருவார் எனவும் கூறினார்.

NFGG யின் உறுப்பினர் திருமதி சலீமா உரையாற்றும்போது இளைஞர்கள் தொலைக்காட்சிக்கு முன் மணித்தியால கணக்கில் விளையாட்டின் பார்வையாளர்களாக இராது பங்காளர்களாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

லேகர்ஸ் கழகத்தின் முயற்சிகளை பிரதம அதிதி உட்பட  அனைவரும் பாராட்டியதோடு கழகத்திற்கான பண உதவியான காசோலை பிரதம அதிதி டாக்டர் ரிபாத் அவர்களினால் லேகர்ஸ் தலைவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக நன்றியுரை வழங்கிய லேகர்ஸ் கழக உபதலைவர் ஆசிரியர் ஹசீப் ஹுதா அவர்கள் , NFGG ஒரு அரசியல் கட்சியாக இருந்தும் இந்நிகழ்வில் அரசியல் பேசாது விளையாட்டின் முக்கியத்துவம் உணர்ந்து கருத்துக்களை பகிர்ந்தமையும் இது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் செய்வதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளதையும் பாராட்டினார்.
Hussain Shiraj
General Secretary
Puttalam Lakers Cricket Club