வாழ்த்து சொல்வதோடு மாத்திரம் நிறுத்தக்கூடாது

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி இன்றுடன் (21/02/1945-21/02/2023) 78 வருடத்தை பூர்த்தி செய்து நகரமத்தியில் நிற்கிறது. வெறுமனே நிற்கிறது என்று குறிப்பிடுவதில் எமக்கும் சங்கடம்தான். கம்பீரமாக நிற்கிறது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் அந்த கம்பீரத்துக்கு சற்று தொய்வு நிலை. அதனை நாம் தான் உயர்த்த வேண்டும்.
.
பழைய மாணவர்கள் அடங்கலாக இன்றைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் (இவர்களும் பழைய மாணவர் தான்) ஒருமித்து இயங்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது. அவ்வாறு இயங்கினால் தான் தொய்வு நிலை நீங்கி பழைய கம்பீர தன்மை நிலைக்கும்.
.
வெறுமனே வாழ்த்து சொல்வதோடு மாத்திரம் நிறுத்தக்கூடாது, அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் இன்று கேள்வி குறியாகி உள்ளது. கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயற்படும் போதுதான் “நாம் ஸஹிரியன்ஸ்” என்று சொல்வதில் பெருமை கொள்ள முடியும். மாற்றமாக இதனில் வீழ்ச்சியை நோக்கியே செல்வோமானால் வருடங்கள் அதிகரிக்குமே ஒழிய வளர்ச்சி காண முடியாது.
.
WAK