விடுகதைகள்

விடுகதைகள் -விடைகள்

1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?

விடைகள்:

1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை