விலையேற்றத்தை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் , ஊழலை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு முகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24/10/2021) காலை இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ் , துஷார பத்திரகே, கிங்ஸ்லி லால் உள்ளிட்டோருடன் புத்தளம் நகர சபை, புத்தளம், கற்பி…

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் , ஊழலை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு முகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24/10/2021) காலை  இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ் , துஷார பத்திரகே, கிங்ஸ்லி லால் உள்ளிட்டோருடன் புத்தளம் நகர சபை, புத்தளம், கற்பிட்டி, வன்னாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

WAK