வெட்டாளை பாடசாலையின் பெயருக்கு சொந்தமானவர்

எம்.எஸ்.எம். அப்பாஸ் (Newton Isaac)
கீழே படத்தில் காட்சி கொடுப்பவர் புத்தளம் நகரின் அன்றைய முக்கியஸ்தர்களில் ஒருவரான எஸ்.ஈ.எம். அசன் குத்தூஸ் அவர்கள். இவர் ஒரு நில அளவையாளர். நாங்கள் காணும் காலத்திலேயே சற்று முதியவர். அவரை எங்கள் காலத்தவர்கள் ‘சர்வர் அப்பா’ என்று அன்புடன் அழைப்பார்கள்.
ஒரு நில அளவையாளர், பிரஸித்திபெற்ற புத்தளத்து வர்த்தகர், கட்டிட நிர்மான ஒப்பந்தகாரர், ‘புத்தளம் ட்ரான்ஸ்போட்’ நிறுவனத்தின் தாபகர் என்று வாழ்வில் சகல துறைகளிலும் ஈடுபட்ட அனுபவசாலி. நேற்று முன்தினம் பொன் விழா கொண்டாடிய வெட்டாளை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயம் தாங்கியுள்ள பெயருக்குச் சொந்தமானவர்.
பல துறைகளிலும் ஈடுபட்டு தள்ளாத வயதில் அரசியலிலும் ஈடுபட்டு புத்தளம் தேர்தற்தொகுதியின் பராளுமன்ற உறுப்பினராக 1970 தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஒரு ஆண்டு பதவி வகித்துவிட்டு வாழ்வை முடித்துக் கொண்டவர். அப்போது நாட்டின் பிரதமராக இருந்தவர் ஸ்ரீமா பண்டாரநாயக்க அவர்கள். அந்தக் காலத்திலே கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இவரது சகலபாடி அதாவது சர்வர் அப்பாவின் மகனான பட்டயக் கணக்காளர் ஏ.ஏ.லத்தீப் அவர்களின் மனைவியின் தந்தை.
அந்த நாட்களிலே மர்ஹும் எம்.எச்.எம். நயினா மரிக்காரின கோட்டை எனக் கருதப்பட்ட புத்தளம் தேர்தற் தொகுதியில் தள்ளாத வயதில் போட்டியிட்டு நயினா மரிக்கார் அவர்களை வெறுமனனே 103 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று சாதனை நிலை நாட்டியவர்.
WAK