வெட்டாளை பாடசாலையில் பேண்ட் வாத்திய குழு உருவாக்கம்

புத்தளம் வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக பேண்ட் வாத்திய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி பேண்ட் வாத்திய குழுவுக்கான உபரணங்களை பெற்றுக்கொள்ள பலரிடம் பல்வேறு விண்ணப்பங்கள் கொடுத்தும் பலனளிக்காத நிலையில் 2020ம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்குமான பாடசாலை செலவுகளில் சிறு தொகையை மீதப்படுத்தி ஒரு சில உபகரணங்களை கொள்வனவு இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் உபகரண பற்றாக்குறை காணப்படும் நிலையில் நலன்விரும்பிகளிடமிருந்து உதவிகளை பாடசாலை நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

WAK