வென்டஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டி தொடரில் புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்டஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி தொடரில் புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இத்தொடரில் இரண்டாம் இடத்தினை புத்தளம் போல்டன் அணி தக்க வைத்து கொண்டது.

ரூஸி சனூன் புத்தளம்  

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்டஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி தொடரில் புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இத்தொடரில் இரண்டாம் இடத்தினை புத்தளம் போல்டன் அணி தக்க வைத்து கொண்டது.

இந்த வெற்றியின் மூலமாக தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணி வென்டஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் அடுத்த சுற்றுக்கான தகுதியை பெற்றுள்ளது. இதேவேளை புத்தளம் லீக்கில் கட்டுப்பட்ட கழகங்களில் புத்தளம் விம்பிள்டன் அணியும், லிவர்பூல் அணியும் இலங்கையின் பிரபல 32 அணிகளுக்குள் ஏற்கனவே தெரிவாகியுள்ளன.

இந்த போட்டி தொடரினை இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்தினாலும் கூட, முதல் சுற்று போட்டிகள் யாவற்றினையும் புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி முடிக்க இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த போட்டி தொடரின் இறுதி போட்டி புத்தளம் மாவட்ட நகர சபை விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (26) மாலை  நடைபெற்றது.

நியூ ப்ரண்ட்ஸ் அணியும், போல்டன் அணியும் இந்த இறுதி போட்டியில் பங்கெடுத்தன. போல்டன் அணியானது 30 வருட காலத்துக்கு பிறகு ஒரு இறுதி போட்டியில் பங்கேற்றது.

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் நியூ ப்ரண்ட்ஸ் அணியினர் 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதியினை பெற்றுள்ளனர்.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ. கியாஸ், ஏ.ஏ. பஸ்ரின், ஏ.ஓ .அஸாம், எம்.எஸ்.எம். இனாஸ் ஆகியோர் கடமையாற்றியதோடு போட்டி ஆணையாளராக புத்தளம் லீக்கின் உதவி செயலாளர் எம்.டி.எம். ரினாஸ் கடமையாற்றினார்.

இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக நியூ ப்ரண்ட்ஸ் அணியின் முன்கள வீரர் முபாரிஸும், சிறந்த கோல் காப்பாளராக போல்டன் அணியின் அஸ்கீனும் தெரிவாகினர்.

புத்தளம் லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் சகல கழகங்களுக்கும் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இதன்போது உதை பந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் லீக்கினால் லீக் நிர்வாகிகளுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மேலங்கிகளும் இதன்போது லீக் நிர்வாகிகளால் இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன நிர்வாகிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் யூ.எல். ஜஸ்வர், உயர் பீட உறுப்பினர் எம்.எம். ரமீஸ், புத்தளம் பதில் நீதவான் எம்.எம். இக்பால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
 
குறிப்பு: 
 
சம்பியன் நியூ ப்ரண்ட்ஸ் அணியினர் கருப்பு நிற அங்கி.

சிறந்த கோல் காப்பாளருக்கான விருதினை போல்டன் அணியின் கோல் காப்பாளர் அஸ்கீன் (பச்சை நிற அங்கி)  இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன உயர் பீட உறுப்பினர் எம்.எம். ரமீஸிடமிருந்து பெற்று கொள்கிறார்.

இரண்டாம் இடம் பெற்ற போல்டன் அணியினர் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா, செயலாளர் யூ.எல். ஜஸ்வர், உயர் பீட உறுப்பினர் எம்.எம். ரமீஸ் ஆகியோரிடமிருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

சம்பியன் அணியான நியூ ப்ரண்ட்ஸ் அணியினர் (கருப்பு நிற அங்கி) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டி சில்வா ஆகியோரிடமிருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்கின்றனர். லீக் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாதும் காணப்படுகிறார்

கழகங்களுக்கான உதை பந்துகளை நகர பிதா கே.ஏ. பாயிஸ் வழங்கி வைக்கின்றார்