வெள்ளி விழா கண்டது ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் விஷேட பிரிவு

(MAMM.Fazeel)
ரு கல்லூரிக்குச் சொந்தமான வெள்ளி விழா பயணம். புத்தளம் சாஹிரா என்ற கல்விச் சாகரம் காலம் காலமாக சாதனை படைத்து வந்துள்ளமை வரலாற்றுச் சான்று. புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் நேரடி நிர்வாகத்தின் கண் காணிப்பின் கீழ் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை பாலர் பாடசாலையாக இயங்கி வந்தமை யாவரும் அறிந்த வரலாற்று உண்மை. இதன் போது பெருந் தொகையான மாணவர்கள் தரம் ஒன்று தொடக்கம் 4 ரையும் பெருந் தொகையான ஆசிரியர் வளம் கொண்டு பிரதி அதிபரின் கீழ் அது இயங்கி வந்தமை பேருண்மை ஆகும்.
.
ஸாஹிராவின் கல்வி வரலாற்று பயணத்தில் ஒரு மைல் கல்லாக இரு மொழி பிரிவு எவ்வாறு இயங்கி தனித்துவமாக வளர ஆரம்பித்ததோ அதே போன்று வளர்ந்து விட்ட கிளையாக விருட்ஷம் பரப்பி இருக்கும் ஒரு துறையை உள்ளடங்கல் கல்வி என அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான விஷேட கல்வி பிரிவும் ஒன்று எனலாம். சமூகத்தின் தேவை கருதி ஸாஹிரா கல்லூரி நிர்வாகத்தின் கீழ் சுமார் 10 வருடங்கள் இதன் பயணம் என்றாலும் தொடர்ந்து மாகாண பாடசாலையாக பிரிக்கப்பட்ட பிறகு சாஹிரா ஆரம்ப பாடசாலையின் கீழ் 15 வருடங்களாக 25 வருடங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது.
.
இவ் வரலாற்றுப் பயணத்தை பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது நீண்ட பயணமாய் நாம் நடை போட்ட காலம் விருட்ஷம் பெற்று இருக்கிறமை அறிய முடிகிறது.
.
நேற்று டிசம்பர் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் இன்றைய தினத்தின் அப்பிரிவு மாணவச் செல்வங்களின் திறமை கண்ட சாஹிரா ஆரம்ப பிரதான மண்டப மேடை அவர்களின் வண்ண மயமான பேச்சு, இசை, நடனம் என வண்ணம் பரப்பி இருந்தமை மட்டில்லா மகிழ்ச்சி அளித்தது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் இருந்து வந்திருந்த திரு. நீளி sir விஷேட கல்விக்கு பொறுப்பான உதவிக் கல்வி பணிப்பாளர் அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.
.
இறுதி வரை எம்மோடு இருந்து மாணவ செல்வங்களை உற்சாகப்படுத்தி மாணவர்களை உரமூட்டியமைக்கு.மேலும் கல்லூரி நிர்வாகம், விஷேட பிரிவு குலாத்துடன் இணைந்த பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கைகோர்த்த அருமையான சந்தர்ப்பம் காணக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இதன் போது அக்காலம் தொட்டு இக்காலம் வரை அரும் பாடு பட்டவர்களுக்கான கௌரவிப்பும் மாணவச் செல்வங்களை தட்டிக் கொடுக்கும் ஊக்குவிப்புகளும் மேடை நிகழ்வுகளை அருமையாகஅலங்கரித்தன.
.
ஸாஹிரா என்று தனித்துவம் அவ் ஆழ் விருட்ஷத்தில் பயனடைந்த கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையின் விஷேட பிரிவு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் கீழ் இயங்கும் சில பாடசாலை விஷேட கல்விப் பிரிவுகளும் இணைந்து கொண்டமை மிக்க மகிழ்ச்சி அளித்தது.
.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் தற்போதைய அதிபர் திருவாளர் I.A Najeem மற்றும் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் தற்போது அதிபர் திருவாளர் MHM. Jawath இருவர்கள் இருவரும் ஒரே மேடையில் இந் நிகழ்வினை நினைவுச் சின்னங்களுடன் தொடக்கி வைத்தமை அக மகிழ்ச்சி அளித்தது. இந் நினைவுச் சின்னம் புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் அவர்களுக்கு கல்லூரிக்காக கையளிக்கப்பட்டது.
.
WAK