வேலைத்தேடுவோருக்கான தனியார் நிறுவன காரியாலயம் புத்தளத்தில் திறந்து வைப்பு
வேலைத்தேடுவோருக்கான ‘jobspola’ தனியார் நிறுவன காரியாலயம் மஸ்ஜித் வீதி சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில்…
வேலைத்தேடுவோருக்கான ‘jobspola’ தனியார் நிறுவன காரியாலயம் மஸ்ஜித் வீதி சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
வேலை ஒன்றை பெற்றுக் கொள்ள இன்னும் சவாலாக உள்ளதா? வேலைக்காக காத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு ஏற்ற வேலையை எவ்வாறு பெற்றுக் கொள்வது? இன்னும் இதுபோன்ற வேலை சம்மந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வாக இவ் நிறுவனம் இயங்கும் என திறப்பு நிகழ்வின் போது தெரிவிக்கப்பட்டது.
www.jobspola.lk இணையதளத்தில் வேலைத்தேடுவோராக பதிவு செய்து கொள்வதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு முன்னனி நிறுவனங்கள் உங்களை பற்றி அறிந்து கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் உங்களுக்கான வேலை நியமனத்தை பெற்றுக் கொள்ளவும் முடியுமாக இருக்கும்.
இவ்விணையத்தளம் மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள கூடிய வகையிலும் மற்றும் விரைவாகவும் எதுவிதமான கணக்குகளும் (User Account Login) இன்றி உங்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருக்கும்.
வேலைத்தேடுவோராக பதிவு செய்து கொள்வதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் 0322 266 268 எனும் காரியால இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.
உங்களது விபரங்களை (Resume) cv@jobspola.lk எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ‘Job Seekers’ பகுதியில் இலவசமாக பதிவு செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
WAK
Unga sevaikku tnx naanum nirantharamaaha oru velaiya thedi kondu the irukka