வௌிநாட்டு பணியாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.

சுற்றறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி உண்டு.

மேலும் இதற்கான அனுமதி 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Circular-Import-of-electric-vehicle

WAK