ஸாஹிரா கல்லூரியின் பழமைவாய்ந்த கட்டிடங்கள் இடிப்பு

(ஆசிரியர் சலீம் மரிக்கார்)

1950ம் ஆண்டு புத்தளம் சாஹிரா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டடத்தில் காணப்பட்ட நினைவுக் கல்லே இது. 72 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் தற்போது பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதன் காரணமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் நிதி திட்டமிடல் அமைச்சருமான அல்ஹாஜ். எம். எச். எம். நைனா மரைக்கார் அவர்களின் சொந்த பணத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் முதலாவது கட்டடமான இந்த கட்டடம் சுத்தியலால் அடித்து உடைக்கப்படும் போது இப் பாடசாலையின் பழைய மாணவனும் ஆசிரியருமான எனது இதயத்தையே ஆயிரம் சம்மட்டியால் அடிப்பதைப் போன்ற உணர்வை நான் உணர்ந்து கொண்டிருக்கின்றேன். அது மாத்திரமன்றி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த கட்டடத்தை பார்க்கும் போது எனது இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

இந்த கட்டடத்தில் இருந்து தான் நான் சாதாரண தர (O/L) வகுப்பில் படித்தேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இனி இந்த நினைவுக் கல்லாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.

WAK