ஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்

முதலாம் தர அதிபரான ஜவாத் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் வணிகமாணி பட்டம் பெற்றவர். பட்டப் பின்படிப்பு கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியையும் பூர்திசெய்தவர். இவர் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலய …

புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில் சுமார் 13 வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய எம்.எஸ்.எம். ஹில்மி அவர்கள் கடந்த 23.12.2020அன்று ஓய்வு பெற்றதையடுத்து இப்பாடசாலையின் புதிய அதிபராக புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய ஏ.எம். ஜவாத் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்காலத்தில் பாடசாலையை பொறுப்பேற்று நடத்திய எம்.எச்.எம். நதீர் ஆசிரியரிடமிருந்து இன்று (15.01.2021) அவர் பாடசாலையைப் பொறுப்பேற்றார்.

முதலாம் தர அதிபரான ஜவாத் அவர்கள், கரைத்தீவு மு.ம.வி., வெட்டாளை அசன் குத்தூஸ் மு. வி., கல்கமுவ முன்னோடி மு.ம.வி. ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றியாவர். 30 வருடங்களுக்கும் மேலான சேவைக் காலத்தை கொண்ட இவர், 18 வருடங்கள் அதிபராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

அதிபர் ஜவாத் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் வணிகமாணி பட்டம் பெற்றவர். பட்டப் பின்படிப்பு கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியையும் பூர்திசெய்தவர். இவர் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலய பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.