‘ஸ்மார்ட் சொய்ஸ்’ வருட பூர்த்தியை முன்னிட்டு இணையத்தளம் ஆரம்பம்
புத்தளம் காஸிம் ஒழுங்கையில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சொய்ஸ்’ நிலையத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு…
புத்தளம் காஸிம் ஒழுங்கையில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சொய்ஸ்’ நிலையத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விணையத்தளத்தில் கேக் செய்வதற்கான பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்துகொள்ளும் அதேநேரம் புத்தளம் பிரதேசத்தில் கேக் வடிவமைப்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் தயாரிப்புக்களுக்கான இணைய சந்தை வாய்ப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.
கேக் தயாரிப்பாளர்கள் மற்றும் கேக் விரும்பிகளுக்கு ஒரு இணைப்பு பாலமாக இவ்விணையத்தளம் தொடர்ந்து இயங்கும். மேலும் மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட சேவைகளையும் இதன் மூலம் செய்துகொள்ள முடியும். இச்சேவை வாரத்தில் ஏழு நாளும் 24 மணித்தியாலமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்க் (https://www.smartchoicelk.com/) இணை க்ளிக் செய்வதன் மூலம் இவ்விணையத்தளத்தை நாடலாம்.
WAK