ஹட்டன் நெஷனல் வங்கியின் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டிகள்
ஹட்டன் நெஷனல் வங்கியின் புத்தளம் கிளையில் சிறுவர் சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் சிறுவர்களுக்கு மத்தியிலான சித்திரம் வரையும்…
அக்டோபர் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வந்த ஹட்டன் நெஷனல் வங்கியின் புத்தளம் கிளை அதன் இறுதி கட்டமாக இந்த சித்திர போட்டிகளை நடாத்தியுள்ளது.
ஹட்டன் நெஷனல் வங்கியின் புத்தளம் கிளையில் கணக்குகளை வைத்திருக்கும் 50 க்கும் மேட்பட்ட சிறார்கள் இந்த சித்திரம் வரையும் போட்டியில் பங்கெடுத்தனர்.
நான் பராமரிக்கும் வீட்டுத்தோட்டம், நான் ரசித்த மிருகங்கள், நான் பார்த்த அழகிய பூந்தோட்டம் எனும் தலைப்புகளில் மாணவர்கள் சித்திரங்களை வரைந்தனர்.
ஹட்டன் நெஷனல் வங்கியின் புத்தளம் கிளை முகாமையாளர் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரதான மத்தியஸ்தராக புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான எம்.எம். முஹம்மது கலந்து கொண்டார்.
முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற சித்திரங்களுக்கு சான்றிதழ்களுடன், பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களுடன் ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.