அமரர் கந்சாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணக்கர்கள் – அனீஸ்

புத்தளத்தின் கணித மற்றும் விஞ்ஞானத்தின் கண்களை திறந்து எமது ஊரில் Professionals களை உருவாக்கிய ஒரு சிலரில் அவர் மிக முக்கியமானவர். அவர் ஓர் Evergreen. அவர் ஓர் Legend. புத்தளம் ஒருபோதும் அவரை மறக்காது.

கந்தசாமி Sir (One of a Kind)

1992 இல் தரம் 10 இல் காலடி வைத்த எனக்கு கணிதம் என்பது மிகவும் கசப்பான ஒன்றாக இருந்தது. என்னவோ தெரியவில்லை கணிதத்தை நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனது அடி மனதில் இருந்தபோதும் எனக்கு முன்னர் கற்பித்த ஆசிரியர்களின் கற்பித்தல் முறை எனக்கு பொருந்தவில்லையோ என்னவோ கணிதம் கற்பது என்பது வேப்பங்காயாகவே இருந்தது.

இந்த சிக்கல் கந்தசாமி Sir உடைய மரிக்கார் Tuition வகுப்புக்கு நண்பன் அமானுடன் போகும் வரை என்னை வாட்டி வதைத்தது. அதுவரை கந்தசாமி என்ற ஆளுமையினை மிகவும் கடுமையானவராகவே நினைத்திருந்த எனக்கு முதல் வகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறினார்.

“முக்கோணிகளின் ஒருங்கிசையல்” எனும் பாடத்தினை தனக்கே உரிய பாணியில் சொல்லித்தந்து நான் அது வரைக்கும் மிகவும் கஷ்டமானது என நினைத்திருந்த Geometry என்பது எவ்வளவு இனிமையானது என்பதனை தெரியப்படுத்தினார்.

x இங்க வா, 2 நீ அங்க போ என சமன்பாடுகளை எளிமையாக தீர்க்கும் முறையினை காட்டித்தந்து Algebra வினை மிகவும் விருப்பமானதாக மாற்றினார். இப்படியாக கணித்தத்தின் எல்லா எண்ணக்கருக்களையும் மிகவும் எளிமையாக சொல்லித்தந்தார்.

கணித்தத்தினை உண்மையாகவே கற்க வேண்டும் என நினைக்கும் எவருக்கும் கணிதத்தினை கணிதமாக கற்பிப்பதில் அவருக்கு அவரே நிகராக திகழ்ந்த்தார். (ஆனாலும் அவரது கணிதம் கற்பிக்கும் திறனை அன்றைய சாகிராவின் தலைமைகள் கண்டு கொள்ளாமல் இருந்தததை அவர் அடிக்கடி கூறி வருத்தப்படுவதும் உண்டு.)

அதேபோல் விஞ்ஞானப் பாடத்திலும் அவர்து கற்பித்தல் மிக உயர்ந்ததாக இருந்தது. பொதுவாகவே மாணவர்கள் இடர்படும் Chemistry மற்றும் Physics பகுதிகளை அவர் சொல்லித்தந்த விதம் உயர் தரத்தில் கணிதப்பிரிவில் கற்பதற்கு மிக உதவியாக இருந்தது உண்மை என்பதுடன் அது பசுமரத்தாணியைப் போல அப்படியே இன்றும் நினைவில் இருக்கிறது.

புத்தளத்தின் கணித மற்றும் விஞ்ஞானத்தின் கண்களை திறந்து எமது ஊரில் Professionals களை உருவாக்கிய ஒரு சிலரில் அவர் மிக முக்கியமானவர். அவர் ஓர் Evergreen. அவர் ஓர் Legend. புத்தளம் ஒருபோதும் அவரை மறக்காது.

“எல்லாம் வல்ல இறைவன் அவரது சேவையை பொருந்திக்கொள்வானாக”

M.A.M. Anees
Deputy Director of Education