33 வருட சேவையிலிருந்து கரைத்தீவின் மாசுன் நிஹார் ஆசிரியர் ஓய்வு

(KMMV-Media Unit)

ரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 33 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறும் A.R மாசுன் நிஹார் ஆசிரியருக்கு பாடசாலையின் அதிபர் A.K. நைமுல்லாஹ் அவர்களின் தலைமையில் பிரியாவிடை வைபவம் நேற்று முன்தினம் (05-01-2023) வெகு விமர்சையாக இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இக்கல்லூரியின் முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய K.M.A .Azeez அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதிகளாக எமது ஆசிரியர் சேவைப்புரிந்த காலப்பகுதியில் எமது பாடசாலையில் சேவை செய்த அதிபர்களான A.C Najimudheen அவர்கள், A.A.Faris Mohamed அவர்கள், A .M.Jawadh அவர்கள், H.A.Muhthar அவர்கள், M.M.Rasik அவர்கள் வருகைத் தந்திருந்தனர். விஷேட அதிதியாக புத்தள வலய கல்விப் பணிமனையின் பாட இணைப்பாளர் மதிப்பிற்குரிய V. Arunaharan அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வு பாடசாலையின் சக ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதன்போது ஆசிரியருக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதேநேரம் பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களாலும் எமது ஆசிரியருக்கு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK