34வது வருடத்தை பூர்த்தி செய்தது புத்தளம் லிவர்பூல் உதைப்பந்தாட்ட கழகம்

(எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் லிவர்பூல் உதைப்பந்தாட்ட கழகத்தின் 34 வது வருட நிறைவும் அதன் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் எம்.ஆர்.எம்.நில்பான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

செயலாளர் கே.எம்.ஹிசாம் வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையையும், பொருளாளர் எம்.ரிஸான் வருடாந்த நிதி அறிக்கையினையும் சபையில் சமர்ப்பித்தனர்.

கழகத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு ஆலோசனைகளும் சபையில் முன்மொழியப்பட்டன.

தொடர்ந்து பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யும் நோக்கில் தற்காலிக இணை தலைவர்களாக கழக அங்கத்தவர்களான அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மற்றும் அஷ்ஷெய்க் சகீனத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தற்காலிக இணை தலைமையில் நடைபெற்ற புதிய நிர்வாக சபை தெரிவில் நடப்பு வருட நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் : ஜே. அஸ்வர்தீன்
செயலாளர் : கே.எம்.ஹிசாம்
பொருளாளர் : எம்.ஐ.எம்.மூஸீன்
உப தலைவர்கள் : புத்தளம் நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதியுதீன், அரசியல் பிரமுகர் எம்.ஆர்.எம்.பரூஸ், ஏ.எம்.அன்சார்.
உதவி செயலாளர் : எம்.சீ.எம்.இஸ்மத்
நிர்வாக உறுப்பினர்கள் : ஐ.ஏ.சிஹான், ஏ.ரிசான், எம்.வை.ரிழ்வான், கே.எம்.சவாஹிர்

WAK