ADDAX நாமம் கத்தாரிலும் தடம் பதித்தது

புத்தளத்தின் பிரபலமான Addax என்ற பெயர் கத்தாரிலும் பதிக்கப்பட்டுள்ளது. Addax Pharmacy என்ற அடையாளம்…

(வசீம் அக்ரம்)

புத்தளத்தின் பிரபலமான Addax என்ற பெயர் கத்தாரிலும் பதிக்கப்பட்டுள்ளது. Addax Pharmacy என்ற அடையாளம் புத்தளத்தில் பரவலாக எல்லோரும் அறிந்த, இலகுவாக எல்லோர் வாயிலும் உச்சரிக்கப்பட்ட பெயர். அதன் உரிமையாளர் சகோதரர் நிஸ்வரை அறியாதோரும் இருக்க முடியாது.

ஒருசில காரணங்கள், கால பரிமாற்றங்கள் காரணமாக Addax Pharmacy இனை தொடர முடியாது போனாலும் அதன் அடையாளம் இன்றுமே நிலைத்து நிற்கிறது.

கத்தார் ஸெஹலியா 17ல் Addax Restaurant and Bake House ஆக புதிய பரிமாணம் எடுத்துள்ளது. புத்தளத்து மணம் கமழும், புத்தளம், இலங்கைக்கு உரித்தான உணவு வகைகள் எமதூர் நட்பு, அன்பு கலந்த பாஷையுடன் பரிமாறப்படுகிறது.

வறண்ட போன நாக்குகளுக்கு இது ஒரு வரபிரசாதமாக இருக்குமென்றால் மிகையாகாது. கத்தாரில் ஆங்காங்கே வசிக்கும் புத்தளத்தவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறையில் இங்கே வந்து அங்காடிகளை சுவைக்கையில் புத்தளத்தில் வெள்ளிக்கிழமை எவ்வாறு நிரப்பமாக இருக்குமோ அவ்வாறு உணர முடிகிறது இங்கும்.

முயற்சியை விடாது தொடரும் விக்ரமாதித்தன் போல சகோதரர் நிஸ்வரின் இம்முயற்சியை கட்டாயம் பாராட்ட வேண்டும். எமக்கு கிடைக்கும் ஓய்வு வேளைகளில் அங்கு சென்று ஊக்குவிக்கும் போது இதே போன்று எம்மூரை பிரதிநிதித்துவப்படுத்தி இவரைப்போல முயற்சியாளர்கள் உருவாகும் சாத்தியப்பாடுகள் வெகுதூரத்தில் இல்லை.

WAK