நல்லாந்தழுவையில் ஆயுர்வேத வைத்தியசாலை
கடயாமோட்டை நல்லாந்தழுவை கிராமத்தில் திறக்கப்படவுள்ள ஆயுர் வேத வைத்தியசாலை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ. எஹியாவின் காரியாலயத்தில் இடம் பெற்றது. வடமேல் மாகாண ஆயுர் வேத ஆணையாளர், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் கடையாமோட்டை நல்லாந்தழுவை பிரதேச கிராம அதிகாரிகள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இம்மாதம் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப்படவுள்ளதாக எஹியா தெரிவித்தார்.
இரு உருப்பினர்ஹளும் ஒற்றுமையாக செயட்படுவதன் மூலம் சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமாக நிறைய சேவை புரிய முடியும் .ஒன்றுபட்டாள் உண்டு வாழ்வு .