காசிமிய்யா அரபுக் கல்லூரி


புத்தளம் நகரில் அமைந்துள்ள “புத்தளத்தின் புதுப்பள்ளி” என அழைக்கப்படும் ஐதுரூஸ் பள்ளியில் ஹிஜ்ரி 1301 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 இல் தான் (அதாவது இன்றைய தினம் – 16.02.2011) காசிமிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

அக்காலத்தில்,  அப்பொழுது புத்தளத்திற்கு வருகை தந்திருந்த தென் இந்திய உலமாக்கள் சிலரும் புத்தளத்தின் தனவந்தர்களும் பெரியோர்களும் ஒன்று கூடி நமது நபி நாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்று இலங்கை திருநாட்டிலேயே முதல் மதுரசாவாக இம்மத்ரசாவை  ஆரம்பித்தார்கள்.

நபிகள் நாயகம் பிறந்த இன்றைய மீலாத் தினத்திலேயே காசிமிய்யா அரபுக் கல்லூரியும் பிறந்துள்ளது www.puttalamonline.com இணையத்தளமும் பிறந்துள்ளது.

காசிமிய்யா அரபுக் கல்லூரி நூறேகால் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, நிமிர்ந்து நின்று முகம்மது நபியின் போதனைகளுக்கும் சாதனைகளுக்கும் சான்றாக பல நூறு உலமாக்களை உருவாக்குவதுபோல் இந்த இணையத்தளமும் பல நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வள்ளல் நபியின் வாழ்க்கைக்கு சான்று பகர்பவர்களாக எம் புத்தளத்தவர்களையும் எத்தளத்தவர்களையும் உருவாக்கும் ! இன்ஷா அல்லாஹ் சாதனைபடைக்கும்…!!


அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
அதிபர்
காசிமிய்யா அரபுக் கல்லூரி

5 thoughts on “காசிமிய்யா அரபுக் கல்லூரி

  1. காசிமிய்யா மதுரசாவின் வரலாற்றை வெகு விரைவில் எதிர் பாருங்கள்…
    கருத்துக்கு நன்றி!!

  2. மத்ரசாவின் வரலாற்றையும் பிரசுரித்தால் சிறப்பாக இருக்கும்

  3. உங்கள் பிரர்த்தன்ய்க்கு நன்றி!
    ஜசாகல்லாஹ்!

  4. இன்ஷா அல்லாஹ் காசிமிய்யா இலங்கை தேசத்திலும் சர்வதேசத்திலும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை செய்யவேண்டும் .அக்கல்லூரியின் இருப்புக்கு புத்தளம் முஸ்லிம் சமூகம் சதாவும் தோல் கொடுக்க வேண்டும் .அதன் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் ஈருலகிலும் நற்பாக்கியங்களை நிரப்பமாக வழங்குவானாக . i

Comments are closed.