வணிகம்

வேலைத்தேடுவோருக்கான தனியார் நிறுவன காரியாலயம் புத்தளத்தில் திறந்து வைப்பு

வேலைத்தேடுவோருக்கான 'jobspola' தனியார் நிறுவன காரியாலயம் மஸ்ஜித் வீதி சிறுவர்...

பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான  உகந்த சூழலினை  நாம் வழங்கியுள்ளோம்! – அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு 'நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பைமேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை  வழங்கியுள்ளோம்' என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் இதனைதெரிவித்தார்.  இவ் அமர்வு கடந்த 18 ஆம் திகதி லண்டன் கில்ட்ஹால் இல் நடைபெற்றது. 200க்கும் அதிகமான பொதுநலவாய  தொழில் முனைவோர் இவ் அமர்வில் பங்கேற்றினர், பங்கேற்றிய  அனைத்து துறையினரும் நிகழ்வுகளை முழுமையாகபயன்படுத்தியுள்ளனர்.  அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோருடன் இலங்கைத் தூதுக்குழு உறுப்பினர்கள் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.  இலங்கை வர்த்தக திணைக்களம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து இந்த அமர்வினை ஒழுங்கு செய்திருந்தது.  இவ் அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில்: வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான பொதுநலவாய இணைப்பு  நிகழ்ச்சித்திட்டத்தில் முதலீட்டு விரிவாக்க மற்றும் வர்த்தக இணைப்பிற்கான வர்த்தக கலந்துரையாடல், டிஜிட்டல்இணைப்பு ஒழுங்குமுறை உட்பட பல  இதர விடயங்கள் பொதுநலவாய உறுப்பினர்களுக்கிடையே உரையாடலின் ஊடாக ஊக்குவிப்பதற்கு   பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில்   உறுதியாக  உள்ளது....