G.C.E.(O/L) பரீட்சை – 2019 பெறுபேறு மீளாய்வு (Re correction) செய்தல்

மேற்படி பரீட்சையின் பெறுபேறு 2020-04-27 திகதி வெளியிடப்பட்டது. இப்பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்பப் படிவத்திற் கிணங்க 2020-07-17 திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பப்படிவத்தை குறித்த அதிபரூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்; தமது விண்ணப்பங்களை தாமே பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
ஒரு பாடம் மீளாய்வு செய்தவற்கான கட்டணமாக ரூ 200/- எனவும் உரிய கட்டணத்தை தபால் மற்றும் உப தபால் அலுவலகத்தில் செலுத்திப், பெறப்படும் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி அனுப்புதல் வேண்டும் எனவும் ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய (26-06-2020 பக்கம் 21) தினகரன் பத்திரிகையிலும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் www.donets.lk வெளியிடப்பட்டுள்ளது.

1 thought on “G.C.E.(O/L) பரீட்சை – 2019 பெறுபேறு மீளாய்வு (Re correction) செய்தல்

Comments are closed.