Gold கிண்ண தொடரில் புத்தளம் லிவர்பூல் அணி சம்பியன்

லங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவிருக்கின்ற FA கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் அணிகளைத் தெரிவு செய்வதற்காக புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட Gold & Silver கிண்ணங்களுக்கான போட்டித்தொடரின் Gold கிண்ணத்துக்கான மாபெரும் இறுதிப்போட்டி அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் புத்தளம் நகரபிதாவும் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

“Liverpool vs Erukkalampiddy” அணிகள் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியின் முடிவில் Liverpool அணி 4:1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. போட்டி நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன் ஆரிப் சிஹான் உதைப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் இரு கழகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நகரபிதா உரையாற்றும்போது நோன்பு காலத்துக்கு முன்னர் புதிய உதைப்பந்தாட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் நோன்பு காலத்தின் பின்னரும் தொடர்ந்து பல தொடர்களை நடாத்தவுள்ளதாகவும் இது உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் எனவும் தெரிவித்தார். போட்டியைக் காண பெருந்திரளான இரசிகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WAK