‘Jaya Farm’ உதைபந்தாட்ட தொடரில் சம்பியனானது Wimbledon அணி

Jaya farm நிறுவனத்தின் பிரதான அனுசரனையுடன் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Jaya Farm Football Championship – 2022 உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டித்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று (26) நகரபிதாவும் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
.
பிரதம அதிதியாக நகரபிதா எம் எஸ்.எம்.ரபீக் அவர்களும் விஷேட அதிதிகளாக Jaya Farm பிராந்திய பொது முகாமையாளரும் நகரசபை உறுப்பினருமான பர்வின் ராஜா மற்றும் நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
.
பிரதான அனுசரனையாளரான Jaya farm நிறுவனத்தின் பணிப்பாளர், நகரசபை உறுப்பினர்கள் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகள் உட்பட ஏனைய பல கௌரவ அதிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
.
உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்த விறுவிறுப்பான இன்றைய Wimbledon vs New Stars அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் முடிவில் 3:1 எனும் கோல் வித்தியாசத்தில் Wimbledon அணி வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
.
வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 50.000 ரூபா பணப்பரிசும் இரண்டாமிடத்தைப் பெற்ற அணிக்கு கிண்ணமும் 30.000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.
.
இதன்போது பல கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இன்றைய போட்டியைக் காண பெருந்திரளான இரசிகர்கள் திரண்டிருந்தனர்
.
WAK