கல்பிட்டி கோட்ட மட்டத்திலான மீலாத் போட்டிகள்

வடக்கு, தெற்கு, கல்பிட்டி கோட்ட பாடசாலைகள் மட்டத்திலான மீலாத் போட்டிகள் எதிர்வரும் 03 .03 .2011 அன்று புத்தளம்…

வடக்கு, தெற்கு, கல்பிட்டி கோட்ட பாடசாலைகள் மட்டத்திலான மீலாத் போட்டிகளை எதிர்வரும் 03 .03 .2011   அன்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் பாடசாலையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது . இதற்கான விண்ணப்பங்கள் சுயமாக தயாரிக்கப்பட்டு அதிபர்கள் ஊடாக 21 .02 .2011 திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும்.இப்போட்டிகள் கனிஷ்ட இடைநிலை சிரேஷ்ட பிரிவுகளாக ஆண் பெண் வேறு வேறாகவும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.போட்டிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் எல்லா பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . கிராத் ,அல் குர்ஆன் மனனம் ,பேச்சு,கவிதை,கட்டுரை, அரபு எழுத்தணி போன்ற நிகழ்சிகள் உள்ளடக்கப்பட்டு ஆங்கிலம் ,சிங்கள மொழிகள் மூலமாகவும் பங்குபற்ற மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிகளில் தேர்வாகும் மாணவர்கள் வலய மட்டத்திலும் தேசிய மட்ட மீலாத் போட்டிகளிலும் பங்கேற்பர்.