PILLARS Intellect-Live வலுவூட்டல் நிகழ்ச்சி
PILLARS அமைப்பின் ஏற்பாட்டில், “பங்குதாரர்கள் இணைந்து பாடசாலையை கட்டியெழுப்புதல்” என்ற தொனிப்பொருளில் நாடறிந்த கல்வியியலாளரும், எழுத்தாளருமான Dr. Rauf Zain அவர்களினால், PILLARS Intellect-Live வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்று 04.10.2022 அன்று மாலை 8 மணியளவில் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் கல்வி வலையத்திற்குரிய, பல அதிபர்கள், பிரதிஅதிபர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், தனியார் கல்லூரி நிறைவேற்றுப்பணிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தனியார் கல்விக்கூடங்களின் முகாமையாளர்கள், நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட கல்வி ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
PILLARS அமைப்பின் இணைத்தலைவர்களான, ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு Z.A.சன்ஹிர் மற்றும் இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி அதிபர் Sheik. MHM முனீர் ஆகியோரது தலைமையில், நடைபெற்ற இந்த மாலை அமர்வில், கலாநிதி Dr. Rauf Zain அவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, பாடசாலையை கட்டியெழுப்புதல் தொடர்பில் பல்வேறு ஆக்கபூர்வ விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
—
Media பகுதி,
Pillars
05-10-2022